மக்கள் கடலில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு
மனிதநேய மக்கள் கட்சியின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா கோவை மாவட்டத்தின் சார்பாக வாழ்வுரிமை மாநாடாக கடந்த 03/02/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.கோவை மாநகரின் நுழைவாயிலிருந்து கருப்பு வெள்ளை கருப்பு கழக கொடிகளில் பட்டொலி வீசிபறந்தது.
கோவை வ.உ.சி மைதானம் என்பது தமிழகத்தின்,இந்தியாவின் மிகப்பெரும் கட்சிகளான திமுக,அதிமுக,காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே இங்கு மாநாடுகளை நடத்தியுள்ளது.இதற்கெல்லாம் அடுத்தபடியாக மனிதநேய மக்கள் கட்சி தனது மாவட்ட மாநாட்டினை நடத்தி முடித்துள்ளது.
முன்னதாக வழக்கப்போல காவல்துறையின் பூச்சாண்டி வேலைகளுடன் (மாநாட்டிற்க்கு மூன்று நாள்கள் முன்னர் கோவையில் பெட்ரோல் குண்டு கண்டெடுப்பு என மாநாட்டினை சீர்குலைக்க சதி செய்தார்கள்)சதிக்காரர்களுக்கெல்லாம் சதி செய்வபன் ஒருவன் இருக்கின்றான் என கா(வி)வல் துறையினருக்கு தெரியாது.
காலையில் மருத்துவ முகாம்,புகைப்பட கண்காட்சி என தொடங்கியது மாநாடு.மாலை 3 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இளைஞர் படை,மகளிர் அணி அணிவகுப்புக்கு காவல்துறை தடை செய்தது.காவல் தடைகளை தகர்க்கும் தாய்கழகம் தமுமுக வில் பயின்ற மனிதநேய மக்கள் கட்சியின் இராணுவ அணிவகுப்பு டெல்லி பேரணியினை நினைவுகூர்ந்தது.சமையலறையை மட்டும் அலங்கரித்த தாய்மார்கள் தமுமுக வின் உதயத்திற்க்கு பின் சமுதாய போராட்டங்களையும் அலங்கரித்த வரலாற்றை கோவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டு முயற்சியால் இது மக்கள் வாழ்வுரிமை மாநாடா ? மகளிர் வாழ்வுரிமை மாநாடா ? என சிந்திக்கவைக்கும் வண்ணம் மாலை 4 மணிக்கெல்லாம் மகளிர் பகுதியில் கூட்டம் அலைமோதியது என்றால் அது மிகையல்ல.
மாலை 5:00 மணிக்கு மாநாட்டு நுழைவு வாயிலில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து இளைஞர் படையின் அணிவகுப்பினை ஏற்று கொண்டார் மாநில தலைவர் மெளலவி ரிபாய் அவர்கள்.தொடர்ந்து மாநாடு இறைவசனத்துடன் இனிதே தொடங்கியது.தலைமைக்கழக பேச்சாளர்கள் சகோதரர்கள் கோவை ஜாகீர்,ஜெய்னுலாபுதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அமைப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி சிறப்பான உரையுடனும் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களின் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை பாடலுடனும் மாநாடு சூடுபிடித்தது.மாநில நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து எழச்சி உரைகள் நிறைவேற்றினார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரகணக்கான கோவைவாசிகள் எங்களின் 20 ஆண்டு கால கனவு அல்லாஹ்வின் கிருபையால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நிறைவேறி உள்ளது எல்லா புகழும் இறைவனுக்கே என இறைவனை புகழ்ந்தவர்களாக கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment