இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, February 21, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இனிதாய் முடிந்த இறை இல்லப்பணி...

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (சன் கார்டனில்)முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி.


அல்லாஹ்வின் கிருபையால் அழகாக நிறைவு பெற்றது மஸ்ஜித்  ஹாரப் அல் நயீமி பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!

மதுக்கூர் மாநகருக்கு கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு பள்ளிவிதம் இறைவனின் மஸ்ஜித்துக்கள் நிறைந்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த காலங்களில் மஸ்ஜித் இஃக்லாஸ்,மஸ்ஜித் தக்வா வரிசையில் இன்று 21/02/2013 புதிய பள்ளிவாசலாக மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி தோன்றியுள்ளது.

இன்று காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் ,S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது,நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

மதியம் 2:15 மணிக்கு லுஹர் தொழுகை நடத்தப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டு பள்ளிவாசலின் திறப்புவிழா நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சன்பாய்ஸ் சார்பாக "இஸ்லாம் விரும்பும் இனிய பெண்கள்" என்ற தலைப்பிலான நூல் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பல சகோதரர்கள் மனமுந்து டீ,குளிர்பானம் பாசமான வினியோகங்கள் நடைப்பெற்று கொண்டே இருந்தது.

பள்ளிவாசல் அமைய காரணமாக இருந்தவர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டார்கள்.இன்ஷா அல்லாஹ் இறைவனும் அவர்களை கெளரவிக்க துவா செய்வோம்.

ஊரில் எத்தனையே இயக்கங்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் ஓன்றினைந்து இருந்தது சந்தோஷாமாக இருந்தது.காழ்புணர்ச்சிகள் இல்லாத இதே ஓற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை தொழுது துவா செய்கின்றோம்.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி உறுப்பினர்கள்,நண்பர் குழு நண்பர்கள்,சமுதாய போராளிகள்,இயக்கவாதிகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்பள்ளி மதுக்கூர் மாநகரில் அமைய உழைத்த அனைவருக்கும் எங்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றோம்.அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து கிருபை செய்ய துவா செய்கின்றோம்


சம உரிமை பேணும்
சகோதரத்துவத்தை வளர்க்கும்
சலாஹ் என்னும் தொழுகையினை நிறைவேற்றிட
சன் கார்டனில் அல்லாஹ்வின் ஆலயம் அமைத்த
சன்றோருக்கும்:சபையோருக்கும்
சங்கைமிகு ஜமாத்தாருக்கும் 
சமுதாய பேரியக்கம்-தமுமுக சார்பாக
சலாத்தை சமர்பிக்கின்றோம்.






































No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...