மதுக்கூரில் கேஸ் சிலிண்டர் மானியத்திற்காக ஆதார் எண் பதிவும் முகாம்-மதுக்கூர் தமுமுக
மக்கள் சேவை முகாம்
மதுக்கூர் தமுமுக சார்பாக கடந்த இரு தினங்களாக மதுக்கூரில் மானிய விலையில் சிலிண்டர் பெற ஆதார் எண்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகின்றது.இன்டேன் கேஸ் வைத்திருப்பவர்கள் அதன் முகவர் அலுவலகமான அதிராம்பட்டிணத்தில் உள்ள பாலு கேஸ் ஏஜென்ஸியின் மானிய விலையில் கேஸ் பெற ஆதார் எண்களை மதுக்கூரிலிருந்து அதிராம்பட்டிணம் சென்று பதிவு செய்யவேண்டும்.மதுக்கூரில் இன்டேன் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் அதிகம்.இதன் காரணமாக அதிகமான தாய்மார்கள் அதிராம்பட்டிணத்திற்கு சென்று தங்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய தொடங்கினார்கள்.இதனால் அதிகமான தாய்மார்களின் காலம்,பணம் செலவு ஆனது.இதை உணர்ந்த சமுதாய சகோதரர்கள் அதிராம்பட்டிணம் பாலு கேஸ் ஏஜன்ஸி உரிமையாளர் சகோதரர் பாலு என்கின்ற பாலசுப்ரமணியம் அவர்களிடம் பேசி மதுக்கூரில் உள்ள இன்டேன் கேஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மதுக்கூரிலேயே முகாம் நடத்தி ஆதார் எண்களை பெற்றுத்தருகின்றோம் என கூறினோம்.அன்புடன் பாலு கேஸ் ஏஜென்ஸி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஆதார் எண் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.சூரியத்தோட்டம்,பள்ளிவாசல்தெரு,சந்தைப்பேட்டை,இந்தியன் வங்கி அருகில் என நான்கு இடங்களில் நடைபெற்றது,இன்டேன் கேஸ் இணைப்பு வைத்திருக்கும் பலர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.பள்ளிவாசல் தெரு முகாம்:
பவாஸ்கான்,அப்பாஸ்,ஆம்புலன்ஸ் நாசரூதீன்,தாஜுதீன்,லுக்மான்,அசாருதீன்,
சூரியத்தோட்டம்
ஜபருல்லா,ராசிக் அகமது,அசீன்,சேக்
சந்தைப்பேட்டை
முகம்மது ராசிக்,முஜிபுர் ரஹ்மான்,S.K.நிசாரூதீன்,நத்தர்ஷா
இந்தியன்வங்கி அருகில்
புரோஸ்கான்,செய்யதுமுகம்மது,நிஷார் அகமது,அப்துல் ஹமீது,
மற்றும் அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் எஸ்.கே.சேக் கலிபா அவர்கள் மேற்பார்வையில் சகோதரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.எல்லா புகழும் அல்லாஹ்கே !
No comments:
Post a Comment