இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, December 24, 2013

மதுக்கூர் சந்தையில் தீ விபத்து

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலனகமிட்டிக்கு சொந்தமான 
புகழ்பெற்ற சந்தைப்பேட்டை உள்ளது.இச்சந்தைப்பேட்டையில் பல்வேறு தொழில் ஸ்தாபனங்கள் செயல்படுகின்றது.குறிப்பாக காய்கறிக்கடைகள் செயல்படுகின்றது.இதில் தர்காவை சுற்றி தற்போது கட்டப்பட்ட வணிக வளாகத்தில் பட்டுக்கோட்டையை சார்ந்த குமார் என்பவர் காய்கறிக்கடை நடத்திவருகின்றார்.நேற்று இரவு வழக்கப்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு குமார் பட்டுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.இன்று 24/12/2013 அதிகாலை 4:45 மணியளவில் குளிப்பதற்காக சென்ற பெண்கள் சந்தையில் தீ எரிவதைக்கொண்டு திடுக்கிட்டு வீட்டில் இருந்த ஆண்களிடம் கடை எரிவதை கூறியுள்ளார்கள்.சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வருவதற்குள்ளாக குமாரின் காய்கறிக்கடை முழுவதுமாக எரித்துவிட்டது.தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாஅல்லது சதி செயல் எதுவும் காரணமா என மதுக்கூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள். சம்பவ இடத்திற்கு மதுக்கூர் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர்,செயலாளர் சதக்கத்துல்லா,பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது,துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் ஜமாத் பிரமுகர்கள் பார்வையிட்டனர்.






No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...