கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த 06/12/2013 (டிசம்பர் 6) அன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்ககழகம் (பாபர் மஸ்ஜித்காக) ஏற்பாடு செய்திருந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் மதுக்கூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய இந்து முண்ணனி ஒன்றிய தலைவன் போஸ் (என்கின்ற) குபேந்திரனையும்,அவனுடன் இருந்து கலவரத்தை தூண்டிய வக்கீல் ராஜபிரபு என்பவனையும் கைது செய்யக்கோரி நேற்று 11/12/2013 தஞ்சாவூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் காவிக்கயவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை ஏற்றார்.மாவட்ட நிர்வாகிகள் வல்லம்,பொருளாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி சகோதரர் உமர் அவர்கள் இறைவசனத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.மதுக்கூர் ராவுத்தர்ஷா,தலைமைக்கழக பேச்சாளர் திருச்சி ரபீக்,மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான்,மாநில வணிகர் அணி செயலாளர் சகோதரர் கலந்தர் என நிர்வாகிகள் ஒருவர்பின் ஒருவராக கண்டன உரைகளையும்,கோஷங்களையும் எழுப்பினார்கள்
தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்களின் எழுச்சி கண்டன உரையும்,தமுமுக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்களின் சங்கபரிவார்களின் வரலாற்று சூழ்ச்சிகளை மேற்கொள்கட்டிய உரைகளையும் செய்தார்கள்.இறுதியில் மாவட்ட செயலாளர் சகோதரர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் நன்றியுரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டம்,தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்,நாகை (வடக்கு,தெற்கு) மாவட்டங்கள்,புதுக்கோட்டை மாவட்டம்,திருவாரூர் மாவட்டம் என டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment