இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 4, 2013

மதுக்கூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட விளக்க தெருமுனைக்கூட்டங்கள்.

கடந்த 18 ஆண்டு காலமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தேதி அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஜனநாயக வழியில் பல்வேறு போராட்டக்களங்களை நடத்திவருகின்றது.வருகின்ற டிசம்பர் 6 தேதி மாவட்ட தலைநகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்த தமுமுக மாநில தலைமை தீர்மானித்து அதற்கான ஆயத்த பணிகள் மாநில முழுவதும் தமுமுக செயல்வீரர்கள் தனிநபர் சந்திப்பு,ஜமாத் சந்திப்பு,அமைப்புகள் சந்திப்பு,தோழமை இயக்க சந்திப்பு ,போஸ்டர்,பிளக்ஸ்,தெருமுனைகூட்டங்கள்,பொதுகூட்டங்கள் என சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று 04/12/2013 அன்று மதுக்கூர் பேருந்துநிலையம்,முக்கூட்டுச்சாலை ஆகிய இடங்கள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மதுக்கூர் நகர தமுமுக மாணவரணி சார்பாக நடத்தப்பட்டது.மாவட்ட மாணவரனி பொறுப்பாளர் சகோதரர் A.ஃபவாஸ் தலைமையிலும்,தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் E.S.M.ராசிக்,நகர தலைவர் M.ஹாஜா மைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் சகோதரர் திருச்சி செய்யது அவர்கள் கலந்துகொண்டு பாபர் மஸ்ஜித்தின் வரலாற்றை விளக்கி பேசினார். (மழை சிறிதுளியாய் விழுந்துகொண்டே இருந்தது.பிரச்சாரம் நடந்துகொண்டே இருந்தது)







No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...