இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, January 11, 2014

அன்பான சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நேற்று 10/01/2013 முகநூல் வாயிலாக ஒரு சகோதரர் பகிர்ந்து கொண்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி.பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் லாரியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள் என இருந்தது.அருமையான சகோதரர்களே எங்கு சென்றாலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள்.அன்பு கூர்ந்து அவைகளை தவீர்த்துவிடுங்கள்.உங்களை நம்பி உங்களின் பெற்றோர்.உங்களை நம்பி உங்களின் மனைவி,உங்களை நம்பி உங்களின் குழந்தைகள்,இப்படி உங்களை நம்பி உங்களை நம்பி என கூறிக்கொண்டே செல்லலாம்.(அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவான்)

எனவே வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக,நிதானமாக,முன்,பின் பார்த்து,வலது,இடது புறங்களை பார்த்து சாலை விதிகளை பின்பற்றி செல்லுங்கள்.இது போன்ற விபத்துங்களிலிருந்து அல்லாஹ் எல்லாரையும் காப்பாற்ற துவா செய்வோம்.

அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட சொன்னார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.(இன்ஷா அல்லாஹ்)



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...