மதுக்கூர் தமுமுக வின் மக்கள் சேவைகள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தமுமுக சார்பாக மதுக்கூர் நகர அனைத்து சமுதாயமக்களுகாக மதுக்கூர் நகர தமுமுக செயல்வீரர்களால் முடிந்த அளவு மக்கள் பணிகளை செய்து வருகின்றனர்.இச்சேவை திட்டத்திற்கு "மக்கள் சேவை"என பெயரிடப்பட்டுள்ளது.குடும்ப அட்டையில் பெயர் நீக்கல்,சேர்த்தல்,முகவரி திருத்தம் போன்ற பணிகள் செய்து கொடுக்கப்படுகின்றது.கேஸ் சிலிண்டர் மானியவிலை பெற ஆதார் எண் பதிவு முகாம் மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்பட்டு இம்முகாமில் சுமார் 1500 நபர்கள் பயனடைந்தார்கள்.மேலும் மின்சார கட்டணம்,தொலைப்பேசி கட்டணங்கள் கட்டிக்கொடுப்பது என மக்கள் நலபணிகளை மேற்கொண்டு உள்ளோம்.தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment