சுப்ரமணிய சுவாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களையும்,கிருஸ்தவ தேவாலயங்களையும் இடித்துவிடலாம் என்ற விஷமக்கருத்தை வெளியிட்ட பஜகா மூத்த தலைவர் "தமிழின துரோகி" சுப்ரமணிய சுவாமியைக் கண்டித்து
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழக தலைமையின் அறிவிப்பின் படிஇன்று தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இன்று (20/03/2015)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழக தலைமையின் அறிவிப்பின் படிஇன்று தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இன்று (20/03/2015)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தஞ்சாவூர் முகம்மது பாதுஷா அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க,மதுக்கூர் பேரூர் கழக செயலாளர் மதுக்கூர் பவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா முன்னிலையில் புரட்சி பாரத (கிருஸ்தவ அமைப்பு) நிர்வாகி எபிநேசன் இன்பநாதன் அவர்களும்,தமுமுக முன்னாள் மாநில செயலாளர்சகோதரர் தர்மபுரி சாதிக் பாட்ஷா அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்கள்.ஆர்ப்பாட்டத்தி ல் தமுமுக செயல்வீரர்கள்,மற்றும் சகோதர இயக்கங்களான PFI,SDPI,TNTJ,உட்பட ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.முடிவில் முன்னாள் நகர தலைவர் ஜபருல்லா நன்றியுரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment