புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டுவிழா
மதுக்கூரில் மையப்பகுதியில் அமைந்துள்ள இறைஇல்லம் பெரியப்பள்ளிவாசல்.இப்பள்ளிவாசல் 1904 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது.இப்பள்ளிவாசலை காலம்சென்ற பெரியவர் TAKA யாக்கூப் மரைக்காயர் அவர்கள் முன்புறமாகவும்,அதன் பின்னர் காலம்சென்ற TAKMஜலீல் மரைக்காயர் பக்கவாட்டிலும் (அகழ் பகுதியிலும்) விரிவுப்படுத்தி,புனரமைப்பு செய்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
நமதூர் பெரியப்பள்ளிவாசலை புதியப்பள்ளிவாசலாக கட்டவேண்டும் என்ற பலரின் எண்ண்த்தின் அடிப்படையில் தற்போது நிர்வாகத்தில் உள்ள பெரியவர்களின் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.அதன் முதல்பகுதியாக கடந்த வாரம் 09/03/2015 ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள்,மதுக்கூரின் இரு கண்கள் என வர்ணிக்கப்படும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகப்பெருமக்கள்,மதுக்கூர் சேவையாற்றும் ஆலிம் பெருமக்கள் ஆலோசனை செய்து நாளை 18/03/2015 புதியப்பள்ளிவாசலுக்கு (பெரியப்பள்ளி) அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment