இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, February 26, 2014

மனிதநேய மக்கள் கட்சி எழுச்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் கடந்த 23/02/2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் நாடளுமன்றம் நோக்கி...என்ற தலைப்பில் சமூக போராளி இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சிப்பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடந்தது.( புகழ் அனைத்தும் அல்லாஹ்கே)

சகோதரர் எஸ்.சாகுல்ஹமீது அவர்களின் இனிய வரவேற்புடனும் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்களின் எழுச்சி தலைமை உரையுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.மமக மதுக்கூர் பேரூராட்சி உறுப்பினர் கபார் அவர்கள் மதுக்கூரில் மனிதநேய மக்கள் கட்சி மேற்கொள்ளும் பணிகளை பட்டியலிட்டார்.அதனை தொடர்ந்து மமக கொள்கை விளக்க பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் உரைக்கு பின்னர் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் மன்னை செல்லச்சாமி அவர்கள் தேவர் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இருந்த சுமூக உறவுகளையும்,பல்வேறு கட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களின் எளிய அனுகுமுறைகளையும் அவருக்கு உண்டான பேச்சு நடையில்  சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினர்.இறுதியாக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் அய்யா நம்மாழ்வரை நல்லெண்ணத்தை எடுத்துரைத்துவிட்டு மோடி தலைமையிலான குஜராத் அரசின் வீழ்ச்சிகளை பட்டியலிட்டு கூறினார்.இறுதியாக நகர செயலாளர் சாகுல்ஹமீது அவர்களின் நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் சிறப்பாக முடிந்தது.


மதுக்கூர் நகர புதிய நிர்வாகிகளால் இப்பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டதை உணர்ந்த பொதுச்செயலாளர் புதிய நிர்வாகிகளை வெகுவாக பாரட்டினார்.புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பாக சிறப்பாக செயல்பட்ட முன்னாள் நிர்வாகி சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் பணி பாரட்டக்கூடியதாக இருந்தது.














No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...