மதுக்கூரில் புதிய அங்காடி( நியாயவிலைக்கடை)திறப்பு விழா
மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு சூரியத்தோட்டப்பகுதியில்புதிய அங்காடி (ரேசன் கடை)இன்று 05/03/2014 திறக்கப்பட்டது.காலை 10:00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் சகோதரர் தண்டாயுதபாணி அவர்கள் தலைமை ஏற்க,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித்தலைவரும்,ஜாமியா மஸ்ஜித் கமிட்டி தலைவருமான சகோதரர் முகைதீன் மரைக்காயர்,மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா,பேரூராட்சி உறுப்பினர்கள் சகோதரர் ரியாஸ் அகமது,கபார் ஆகியோர் உரை நிகழ்த்த மதுக்கூர் பால்வளத்துறைத்தலைவரும்,அதிமுக ஒன்றிய செயலாளருமான சகோதரர் துரை.செந்தில் அவர்கள் புதிய நியாயவிலைக்கடையினை திறந்து வைத்து சிறப்புரை செய்தார்.பேரூராட்சித்துணைத்தலைவரும்,15வது வார்டு பேரூராட்சி உறுப்பினரும்.நியாயவிலைக்கடை சூரியத்தோட்டத்தில் வர
பெரும் முயற்சி எடுத்தவருமான சகோதரர் ஆனந்த் நன்றியுரை கூறினார்.இந்நிகழ்ச்சியில் இப்பகுதி பெரியோர்கள்,தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment