மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்தல்கள்
கடும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்,மோர் பந்தல்கள் தாய்கழகம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து பொதுமக்களுக்கு சமுதாய பேரியக்கம் தமுமுக சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்க்ம்.
தமுமுகவின் வழிகாட்டலின்படி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இன்று 16/04/2013 மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக 9வது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர்தெரு,மகாசூப்பர் மார்க்கெட்,கொல்லைத்தெரு,பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றின் ஜங்ஷனில் தண்ணீர் பந்தல் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நிசார் அகமது,கவுன்சிலர் கபார்,பவாஸ்,ரமீஸ்,மாலிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
.
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment