புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
மதுக்கூர் இடையகாடு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையினை கண்டித்து மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த 26/03/2013 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான களப்பனியினை செய்தனர்.போராட்டத்தின் வீரியத்தினை அறிந்துகொண்ட அரசுத்துறை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடையகாடுவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையி ல் ஒருசில நாட்களில் புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.அதன்படி கடந்த 02/04/2013 அன்று இடையகாடு பகுதியில் 100 KV மின் திறன் கொண்ட புதியமின்மாற்றி வைக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே !
இருந்தும் தெருவிளக்குகள் இடையகாடு பகுதியில் இன்னும் சரியாக எரியவில்லை.வீட்டு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கின்றது.தெருவிளக்குகள் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்கள்.
துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
No comments:
Post a Comment