புகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக இருந்த அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் களம்கண்ட சமுதாய பேரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின் மதுக்கூர் நகர கிளை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இன்று முதல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.மற்றொன்று புதிய கட்டிடத்தில் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்படும் என கலால்துறையினர் உறுதியளித்து உள்ளார்கள்.
மேற்படி டாஸ்மாக் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் CM Cell மூலமாக கோரிக்கை மனு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.Cm Cekk மூலமாகவும் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.விரிவான செய்திகள் விரைவில் (இன்ஷா அல்லாஹ்)
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment