உயிரினும் மேலான எம்பெருமனார் நபிகள் நாயகம் ஸல்... அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக சினிமா எடுத்துள்ள அமெரிக்க பயங்கரவாதியின் ஈனச்செயலைக்கண்டித்தும்,அத்திரை ப்படத்தை உலகமெங்கும் தடைச்செய்யக்கோரியும் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் 17/09/2012 திங்கட்கிழமை மாலை 5:15 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மனிதநேய மக்கள கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்டத்திற்கு தமுமுக மதுக்கூர் நகர தலைவர் பெளசூல்ரஹ்மான்,செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,பொருளாளர் ஹாஜா மைதீன்.ஐன்டிஜெ நகர பொருப்பளர் செய்யது,நகர பொருப்பாளர் சேக்பரீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்டன உரையினை தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் நிகழ்த்தினர்கள்.பெண்கள் உட்பட சுமார் 400 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமுமுக நகர பொருப்பாளர்கள் முகம்மது ராசிக்,ஜபருல்லா,ராசிக்,நிஷார் அகமது,நஸாருதீன்,பைசல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment