பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் நமதூரில் பருவமழை இந்த வருடம் சரியாக பெய்யவில்லை எனபதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது.பெரும் அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது.
நமதூர் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் (கீற்றுச்சந்தையில்) பெரிய நீர்தேக்க தொட்டி ஓன்று உள்ளது.இதனால் பெரும் அளவில் நமதூரில் குடிநீர் பற்றாக்குறை இல்லை.காலநிலைகளின் மாறுதல்களையும்,மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும் நமதூருக்கு மற்றொரு நீர்தேக்கத்தொட்டி அவசியமாகிறது என்பதை கவனத்தில் கொண்டுள்ள நமதூர் பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சி தன்னிறைவு திட்டத்தின் கீழ் புதியதோர் நீர்த்தேக்கதொட்டி கட்ட தீர்மானித்துள்ளது.இத்திட்டம் பற்றிய தெளிவான பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நமது இம்மை வாழ்வுக்கு பிறகும் அடுத்தவர்களுக்கு பயன் தரக்கூடிய நன்மையான காரியம் ஒவ்வொன்றும் நிலையான தர்மமாகும் என அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க உங்களால் ஆன நிதி உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நீங்கள் செலுத்தும் நிதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தால் ரசீது கொடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பு :வெளிநாடுகளில் இதற்க்காக ரூமில் உள்ளவர்கள் குழுவாக இருந்து வசூல் செய்து நிதி கொடுத்தவர்களின் பெயர்களையும்,தொகையினையும் அளித்தால் மதுக்கூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ரசீது அனுப்பிவைக்கப்படும்.
No comments:
Post a Comment