மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற செப் 22 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள இரண்டு மதுபானக்கடைகளையும் அகற்றக்கோரி மாபெரும் முற்றுகைப்போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது இன்ஷா அல்லாஹ்...
மேற்படியான முற்றுகைப்போராட்டத்துக்கான ஆயத்தப்பணிகளை மதுக்கூர் நகர நிர்வாகிகள் செய்துவருகின்றார்கள்.பொதுமக்களிடம் போராட்டம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில்முற்றுகைப்போராட்டம் சம்பந்தமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது,பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் தெருமுனைப்பிரச்சாரம் செய்யவும் தீர்மானித்துள்ளது.போராட்டம் வெற்றிபெற துவா செய்யுங்கள்.
No comments:
Post a Comment