மதுபானக்கடை (டாஸ்மாக்)முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் இரண்டையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை
வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற செப் 22 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர்
சகோதரர் எம்.தமிமுன் அன்சாரி தலைமையில் இரண்டு மதுபானக்கடைகளையும் முற்றுகை செய்யும் போராட்டம் அறிவிக்கப்பட்டு
அதற்கான ஆயத்தபணிகளை மதுக்கூர் நகர நிர்வாகிகள் மிகவும் தீவிரமாக மேற்கொண்டனர்.
போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசுத்துறை நகர நிர்வாகிகளிடம் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனார்.இறுதியாக
நேற்று 13/09/2012 பட்டுக்கோட்டை வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்கோட்டாட்சி யர் அவர்களின் தலைமையில்
பட்டுக்கோட்டை வட்டாட்சியர்,பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்,மதுக்கூர் காவல் ஆய்வாளர்,கிராம நிர்வாக
அதிகாரி,கிராம வருவாய் அலுவலர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையில் அரசு
மதுபானகடைகளை அகற்றுவதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு
கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் இன்னும் 2 மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள சம்மதித்து
எழுத்து வடிவில் உறுதிமொழி அளித்ததையடுத்து டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை போராட்டம்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பேச்சுவாத்தையில் மனிதநேயமக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் ராவுத்தர்ஷா தலைமையில்,தமுமுக நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,மமக நகர செயலாளர் கபார்,பொருளாளர் ஹாஜா மைதீன்,ஹபிபுல்ல்லாஹ்,நிசார் அகமது,ஜபருல்லா,ராசிக், நஸாருதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மதுக்கூர் அரசுமருத்துவமனை தரம் உயர்த்துவது சம்மந்தமாகவும்.மதுக்கூர் மெயின்ரோடு முதல் ஆற்றாங்கரை சாலையின் இருபுறமும் குவிந்து இருக்கும் மணல்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்க்கு வட்டாட்சியர் அவர்கள் அரசுமருத்துவமனை சம்மந்தமாக எடுத்துரைத்தார்.சாலையின் மணல்களை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு ஆணையிட்டார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அளிக்கப்பட்ட கடிதத்தையும் மதுக்கூர் தமுமுக மதுபான கடைகளை
அகற்றுவதற்காக இதுவரை எடுத்த தொடர் முயற்சிகளையும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள பைலில்
காணவும். ஜஸக்கல்லாஹ் கைரன்.
No comments:
Post a Comment