இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, December 14, 2015

களப்பணியே எங்கள் கழகப்பணி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து இரு கட்டங்களாக நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு சுமார் 5 இலட்சம் ஆகும்.பல நபர்கள்,குடும்பங்கள் எங்களிடம் பல நிவாரப்பொருட்களை கொடுத்தார்கள்.சுமார் 6 மூட்டை அரிசி இரு நபர்களால் கொடுக்கப்பட்டது.மதுக்கூர் பெரியச்செட்டிதெருவில் உள்ளஆயிஷா டெக்ஸ் என்ற நிறுவனத்தால் சுமார் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள ஆடைகளையும்,மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள ரெடிமேட் சென்டர் என்ற நிறுவனம் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளையும் நிவாரணப்பொருட்களாக கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.பல பெண்கள் தங்கள் வீட்டில் இருந்த புதிய துணிகளை கொடுத்தார்கள்,ஸ்டீபன் என்ற சகோதரர் ரூ 4 ஆயிரம் மதிப்புள்ள கொசுவர்த்தீகளை வாங்கிகொடுத்தார்.பலர் தைலம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்தார்கள்.இப்படி அவரவர் சக்திக்கு உட்பட்டு நிவாரணப்பொருட்களாக கொடுத்தார்கள்,அமீரக நண்பர்களும் தங்கள் பங்கிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தார்கள்.

இவை அனைத்தையும் ஆலோசனைகள் செய்து,கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளான மமக செயலாளர் பெரியவர் மதார்ஷா பாய்,தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் ஜபார் அலி ஆகியோரின் ஆலோசனைகளின்படி பாதிக்கப்பட்ட கிராமங்களை நோக்கி சென்று மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணப்பொருட்களை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி கடலூர் மாவட்டத்தில் களப்பணியினை செய்து மனநிறைவுகளுடன் மதுக்கூர் வந்தடைந்தோம்.

"எல்லா புகழும் இறைவனுக்கே"














No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...