தன்னார்வ பணிகளில் தமுமுக.............
மக்கள் சேவைகளில் மனிதநேயமக்கள் கட்சி...
(அல்ஹம்துலில்லாஹ்)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் பணியினை தூய்மையான எண்ணங்களுடன் செய்துவருகின்றார்கள்.குறிப்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக),மனிதநேய மக்கள் கட்சி (மமக) தீபாவளிக்கு முன்னர் ஏற்பட்ட மழை சேதங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவது,நிவாரண உதவிகளை மேற்கொள்வது என தனது பணியினை தொடர்ந்து இன்றுவரை ஓய்வின்றி செய்து வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்..
தஞ்சாவூர் (தெற்கு) மாவட்டம் சார்பாக குறிப்பாக மதுக்கூர்,அதிராம்பட்டிணம்,பட்டுக்கோட்டை,முகம்மது பந்தர் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 5 இலட்சம் மதிப்பிளான நிவாரணப்பொருட்களுடன்.நேற்று நள்ளிரவு மதுக்கூர் நகர அலுவலகத்திலிருந்து அதிராம்பட்டிணம்,பட்டுக்கோட்டை அவசர கால ஊர்திகள் மற்றும் நிவாரண பொருட்களை ஏற்றிவந்த 4 வாகனங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை பாதுஷா,தமுமுக (தெற்கு) மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் ஆகியோர் முன்னிலையில் கடலூரை நோக்கி பயண மேற்கொண்டோம்.
விருத்தச்சலத்தில் உள்ள நவாப் மஸ்ஜித் தமுமுக,மமக பொறுப்பாளர்கள் எந்தஎந்த பகுதிகளுக்கு உதவிகள் தேவை என கணக்கிட்டவண்ணம் இருந்தார்கள்,அவர்களின் ஆலோசனை படி மங்கலப்பேட்டை அருகில் உள்ள சமத்துவபுரத்திற்கும் மற்ற சுற்றுபகுதிக்கும் சேர்ந்து சுமார் 15 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்டது.தொடர்ந்து நெய்வேலி பயணித்து வாகனம் செல்லும் வழியில் அங்கங்கே மக்கள் தங்களின் கரங்களை நீட்டி எங்க பகுதிக்கு நிவாரண பொருட்கள் வேண்டு என நிவாரண வாகனங்களை கேட்ட வண்ணம் இருந்தார்கள்.
மாவட்ட (ஆட்சியர்) போல செயல்படும் மமக,தமுமுக செயலாளர்கள்
***********************************************************************************************
நெய்வேலியில் தமுமுக,மமக சார்பில் நிவாரண பணிகள் மாவட்ட செயலாளர்கள் மதார்ஷா (மமக),ஜபார் அலி (தமுமுக),சாதிக் பாய் (நகர செயலாளர்) ஆகியோர் தலைமையில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளியை மைய இடமாக வைத்து சிறப்பாக செயல்படுவதை அறிந்து மெய்சிலித்து போனோம்.பல கிராம நிர்வாக அலுவலர்கள்,பல கட்சியினை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்,பல கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம தலைவர்கள் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிக்கு வருகை தந்து மாவட்ட நிர்வாகிகளிடம் எங்கள் பகுதிக்கு நிவாரண உதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.அவற்றை மாவட்ட நிர்வாகிகள் இரண்டு சகோதரர்களை அனுப்பி பார்வையிடுகின்றார்கள்.பின்னர் தகுதியான பகுதிக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் எடுத்து சென்று வினியோகம் செய்யப்படுகின்றது.அவ்வாறு விசாரிக்கப்பட்ட பகுதிகளின் ஒன்றான சேத்தியதோப்பு பகுதியில் உள்ள மதுவானைமேடு என்ற கிராமத்திற்கு சென்றோம்.அங்கு சுமார் 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம்.பின்னர் அருகில் இருந்த பல ஆதி திராவிடர் கிராமங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினோம்.சென்ற இடங்களில் சில பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறை பாதுகாப்புடன் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.
மக்களுக்கு சேவை செய்ய பலர் முயற்சிகள் செய்து தங்களின் பணிகளை விட்டு களத்திற்கு வருகின்றார்கள்.ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்பு கூர்ந்து பொறுமையுடன் உங்கள் உதவிகளை பெற்று கொள்ளுங்கள்.
அண்டை வீட்டார் பசித்திருக்க தன் மட்டும் வயிறார உணவு உண்பவன் உண்மை முஸ்லிம் அல்ல என்று போதித்த இஸ்லாமிய சமுதாயத்தின் பேரியக்கம் தமுமுக,மமக தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரியட்டும்.
எல்லா புகழும் அல்லாஹ்கே.
வழங்கப்பட்ட பொருட்கள்
1.அரிசி
2.து.பருப்பு
3.ரவா
4.சீனி
5.தீப்பெட்டி
6,மெழுகுவர்த்தி
7.கடுகு
8,S.F.ஆயில்
9.டீ தூள்
10.பால் பவுடர்
11. ஹார்லிக்ஸ்
12.குழம்பு தூள்
13.மிளகாய் தூள்
14.பிஸ்கட்
15.ரஸ்க்
16.துண்டு (டவல்)
17.நைட்டி
18.சர்ட்
19.புடவை
20.பேன்ட்
21.மாத்திரைகள்
22.தைலம்
23.சேற்று புண்ணிற்கு மருந்து
24.பேஸ்ட்
25.ஃபிரஸ்
26.தேங்காய் எண்ணெய்
27.சிறுமி,சிறார்களுக்கான உடைகள்
28.கொசுவர்த்தி
மேலும் பல பொருட்கள் கொடுக்கப்பட்டது.
(இது மட்டுமில்லாது மதுக்கூர் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள உடைகள்)
குறிப்பு : இன்றும் தஞ்சாவூர் (தெற்கு மாவட்டம் ) சார்பாக பேராவூரணி,ஆவணம் பகுதிகளிலிந்து கொடுக்கப்பட்டது.
மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக மதுக்கூரிலிருந்து இரண்டாம் கட்ட நிவாரண் பொருட்களுடன் விரைவில் செல்ல இருக்கின்றோம்.உதவி செய்ய எண்ணம் உள்ள சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும்.
A.ஃபவாஸ் 97158 58328
A.Er.முகம்மது இலியாஸ் 97891 55480
M.கபார் 9865851693
No comments:
Post a Comment