டிசம்பர் 6 2015 போராட்டக்களம்.
***************************************************
மதுக்கூரிலிருந்து கருப்பு சட்டை அணிந்து போராட்ட களத்திற்கு புறப்பட்ட தமுமுகவினர் !
**********************************************************************************************************************************
இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் பெறுவதற்காகவும், பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் முடிக்கவும், இடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுகவினர் தமிழகமெங்கும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதற்காக மதுக்கூர் பேரூர் கழக செயல்வீரர்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக களப்பணிகளை தீவிரமாக செயல்பட்டார்கள்
அதிரை நகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று தஞ்சையில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமுமுக மாவட்ட பொருளாளர் ESM முகம்மது ராசிக்,பேரூர் கழக செயலாளர் மதுக்கூர் A. பவாஸ் ஆகியோர் தலைமையில் தலைமையில் இளம் சிறுவர்கள் உட்பட அதிரையிலிருந்து கருப்பு சட்டை அணிந்து போராட்ட களத்திற்கு 8 க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக தமுமுக மதுக்கூர் பேரூர் கழக அலுவலகத்தில் இன்று காலையில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக மறைந்த மதுக்கூர் பேரூர் கழக அமீரக பொறுப்பாளர் ஜமால் முகம்மது அவர்களின் சகோதரரும்,முகநூல் பிரபலமான சாகுல் அத்தா அவர்கள் மதுக்கூர் வடக்கு வரை வருகை தந்து வாகனங்களை வழியனுப்பிவைத்தார்.
தஞ்சாவூர் கொட்டும் மழையில் டிசம்பர் 6 போராட்டக்களம்
************************************************************************************
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஆர்ப்பாட்டம் காலை 11:45 மணிக்கு தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேசன் அருகில் மாவட்ட தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அகமது ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் வரவேற்புரை நிகழ்த்தினர்.
சகோதரர் மதுக்கூர் ஃபவாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மாநில செயலாளர் சகோதரர் கோவை உமர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.தமிழ்தேசிய இயக்க தோழர் வைகறை உரை நிகழ்த்தினர்.தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமுமுக,மமக மாவட்ட,பேரூர்,வார்டு கிளை உறுப்பினர்கள்,சமுதாய போராளிகள்,தன்னார்வ நண்பர்கள்குழுவினர்,தாய்மார்கள்,இளைஞர்கள்,
சிறார்கள்,கொட்டும் மழையில் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பம் முதல் முடிவும் வரை கனமழை இடைவிடாத பெய்துகொண்டு இருந்தது.தாய்மார்கள் கொஞ்சமும் களையாமல் கைக்குழந்தைகளுடன் கலந்துகொண்டார்கள்.தஞ்சாவூர் நகர செயல்வீரர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
சமுதாய போராட்டக்களத்தில் சமூக பணி
*****************************************************************
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு தலைமுறை காலமாக (20 வருடங்களாக) போராட்டக்களத்தை வகுத்து செயல்படும் சமுதாய பேரியக்கம் தமுமுக இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கருஞ்ச்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆர்ப்பாட்ட முடிவில் வெள்ளநிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது.
புகழ் அனைத்தும் அல்லாஹ்கே.
No comments:
Post a Comment