மதுக்கூரில் சுகந்திர தின கொண்டாடங்கள்.
பேரூராட்சி அலுவலகம்
************************
இந்தியாவின் 69வது சுகந்திர தின இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ்,வர்த்தக சங்க தலைவர் அப்துல் காதர்,தொழில் அதிபர் சந்திரசேகரன் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,முருகையன்,ரியாஸ் அகமது,கபார்,சுரோஷ் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் N.S.M.பசீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்.
தமுமுக அலுவலகம்
************************
மதுக்கூர் பேரூர் கழக தமுமுக அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் நிசார் அகமது,பேரூர் கழக பொருளாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் சகோதரர் E.S.M.முகம்மது ராசிக் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்.
நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளி)
************************************
மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளியில்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் காதர்,கிராம கல்விக்குழு தலைவர் பேரூராட்சி உறுப்பினர் கபார்,பெரியவர் முகம்மது அலி ஜின்னா,கவுன்சிலர் நாகூர் கனி,ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியர்களின் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.இதில் ஜமாத் உறுப்பினர் முத்துமுகம்மது,முகம்மது அலி ஜின்னா (ஊருட்டி),எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்திய சுகந்திர தின கொண்டாடங்கள் மதுக்கூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்,காவல் நிலையம்,தபால் நிலையம்,பொதுப்பணிதுறை அலுவலகம்,பொது நூலகம் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,இஸ்லாமிய இயக்க அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment