மதுக்கூரில் தமுமுக முப்பெரும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக இந்திய சுகந்திர தின நிகழ்ச்சி,தமுமுக விருது 2015,சமூக நல்லிணக்க நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி 14/08/2015 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,தியாகி சசிபெருமாள் அரங்கில் தமுமுக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் இறைவசனம் ஓத,சகோதரர் நிசார் அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா,மாவட்ட பொருளாளர் அதிரை அகமது ஹாஜா ,பேரூர் கழக செயலாளர் பவாஸ் கான்,பொருளாளர் இலியாஸ் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள்,பேரூர் ,கிளைக்கழக செயலாளர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக விருது 2015
2014 -2015 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபா அவர்களுக்கும்,மதுக்கூர் சூரியத்தோட்டம் ஊ,ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (ஒய்வு) அய்யா.ஆ.பாலசுந்தரம் ஆகியோருக்கு மாநில செயலாளர் விருதுகளை வழங்கினர்.மாணவி ஷபாவுக்காக அவரின் தந்தையார் ஆபிதீன் மரைக்காயர் விருதினை பெற்றுக்கொண்டார்,ஆசிரியர் பாலசுந்தரம் அவர்களுக்கு தமிழாக்கம் குர் ஆனும்,விருதும் வழங்கப்பட்டது.
சிறப்புரை
தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் "தாங்கல்" அப்துல் காதர் அவர்கள் விடுதலைப்பேரில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியும்,மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் பாசிசவாதிகளை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
தீர்மானம்
முன்னதாக ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அவற்றை பேரூர் கழக நிர்வாகிகள் முறையே சகோதரர்கள் அப்பாஸ்,புரோஸ்கான்,அகமது சபீர்,பேரூர் கழக செயலாளர் பவாஸ் ஆகியோர் வாசித்தனர்.
1.தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனே அமல்படுத்தவேண்டும்.
2.பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும்.
3.மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்
4.மத்தியில் ஆளும் அரசு மததுவேஷங்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு அனைத்து மக்களையும் அரவாணைத்து செயலாற்றவேண்டும்
5.மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள அரசு மதுபானக்கடை உடனே அப்புறப்படுத்தவேண்டும்.
இறுதி பேரூர் கழக துணைச்செயலாளர் ராசிக் அகமது அவர்கள் நன்றியுரைவுடன் முப்பெரும் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment