மதுக்கூரில் .......தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழகமெங்கும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றார்கள்.இன்று 04/08/2015 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி,மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,அழைப்புவிடுத்து இருந்தனர்.
மதுக்கூரில் இன்று மாலை 4:45 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் ஏற்பாடு செய்து இருந்த மதுவிலக்கு கோரிக்கை பேரணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கூட்டுச்சாலையில் நிறைவு பெற்று மதுவுக்கு எதிரான வலுவான கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் கபார் தலைமை வகித்தார்.மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,தமுமுக ஃபவாஸ்,ஜபருல்லா,அமீரக பொருப்பாளர்கள் முகம்மது சேக் ராவுத்தர்,நிசார் அகமது,அப்துல் ஹமீது,ஜாசிம்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லாஹ்,மதிமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் கரிமுத்து,சிபிஎம் வேதச்சலாம்,சிபிஐ பாரதிமோகன்,விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் ந.இளந்தென்றல்,சமூக சேவகர் எபிநேசன் இன்பநாதன் உள்ளிட்டவர்கள் மதுவுக்கு எதிராக பேசினார்கள்.பேரணி,ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.விரைவில் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையினை அப்புறப்படுத்தக்கோரி முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்புடன் முடிவு பெற்றது.

No comments:
Post a Comment