பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.. .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுக்கூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நான்கு வார்டுகளில் போட்டியிட்டு (4,8,9,15) ஒரு வார்டில் அதாவது 9 வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் பேரூராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி உறுப்பினர் கடந்த ஆண்டு பேரூராட்சி உறுப்பினருக்கான கணக்குகளை மதுக்கூர் நகர நிர்வாகிகளிடம் சமர்பித்தார்.இது போல இவ்வருடமும் தனது கணக்குகளை சமர்பித்துள்ளார்.நமது மதுக்கூர் தமுமுக இமெயில் வாசகர்களுக்கு அதை வெளியிடுகின்றோம்.
ஏக இறைவனின் திருப்பெயரால்...
நம் அனைவரின் மீதும் இறைவனின் அன்பும்,அருளும் என்றென்றும் நிலவட்டுமாக !
எல்லா புகழும் இறைவனுக்கே !
நான் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மதுக்கூர் பேரூராட்சி 9 வது வார்டு உறுப்பினர்பொறுப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.(அல்ஹம்துலில்லாஹ்).கட ந்த இரு ஆண்டுகளாக பேரூராட்சி உறுப்பினர் என்ற முறையில் பேரூராட்சி தலைவர்,துணைத்தலைவர்,செயல்அதிகாரி,சக உறுப்பினர்கள்,செயல் அலுவலர்கள் மற்றும் நான் சார்ந்த அமைப்பின் செயல்வீரர்கள் உதவியுடன்என்னால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றேன். நான் உறுப்பினராக பொறுப்பேற்றதுமுதல் உள்ள எனது கோரிக்கையான மழை காலங்களில் பட்டாணியர் தெரு சாலையில் மழைநீர் பெருமளவுதேங்கிவிடுகின்றது.இது சம்மந்தமாக பலமுறை மன்ற கூட்டத்தில் பேசியிருக்கின்றேன்.கடந்த 17/06/2013நடைபெற்ற மன்ற கூட்டத்தில் எனது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது (பொருள் எண் :7).எனவே கூடிய விரைவில்பட்டாணியர்தெரு சாலை உயர்த்தி சிமெண்ட் சாலை அமைக்கப்படும்.(இன்ஷா அல்லாஹ்).
மேலும் துணைத்தலைவர் தேர்தல் முதல் இன்று வரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் என்றமுறையிலும்,பணிநியமன குழு உறுப்பினர் என்ற முறையிலும் நான் யாரிடமும் எதற்காகவும்நேரடியாகவோ,மறைமுகமாகவோ இலஞ்சமோ,கமிஷனோ பெறவில்லை என்ற உறுதியினை படைத்த இறைவன்மீது ஆணையாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது பேரூராட்சி உறுப்பினர் பணிகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நிறைகளாக மாற்ற தகுந்தஆலோசனைகளை வழங்க் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
M.கபார்
9வது வார்டுஉறுப்பினர்,
மதுக்கூர் பேரூராட்சி,
மனிதநேய மக்கள் கட்சி.
செல்:98658 51693
No comments:
Post a Comment