வடக்கு வாழ்கிறது ! தெற்கு தேய்கின்றது ! !
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர்.வாரச்சந்தைக்கு பெயர் பெற்ற ஊர்.மதுக்கூரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும்.இச்சந்தையில் மதுக்கூர், சுற்று புற மக்கள் மட்டும் இன்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் விவசாய பெருமக்கள் தங்களின் விளைப்பொருட்களை இங்கு வந்து விற்பனைசெய்வார்கள்.
கீற்றுச்சந்தை என நகரின் ஒரு பகுதியில் விவாசாயிகள் தங்கள் வீட்டில்,தோப்பில் இருக்கும் தென்னை ஓலைகளை பிண்ணி கீற்றாக வந்து இங்கு விற்பனை செய்வார்கள்.
கோழி சந்தை இச்சந்தை சேக்பரீது தர்ஹா எதிர்புறம் உள்ள மைதானத்தில் நடைபெறும்,
புளி,மல்லி,மிளகாய் சந்தை இச்சந்தையில் விவசாய பெருமக்களும்,மிளகாய்,மல்லி பெரும் வியாபாரிகளும் தங்களின் பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்வார்கள்,
கருவாடு சந்தை
அதிராம்பட்டிணம் மற்றும் கடலோரப்பகுதி கருவாடு விற்பனை செய்யும் பெண்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று மதுக்கூர் சந்தையில் முகாமிட்டு தங்களின் வியாபாரத்தை வளர்த்து கொள்வார்கள்.மேலும் பொங்கல் திருநாளில் மதுக்கூரில் பிரத்யோகமாக கரும்பு,மஞ்சள்,வாழை சந்தைகள் நடைபெறும்.
இப்படி சந்தைகளில் புகழ் பெற்ற மதுக்கூரில் சமீப காலமாக சந்தைப்பகுதியில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.காரணம் சூப்பர் மார்க்கெட்டின் ஆதிக்கம் ஒருபுறம்,சந்தையில் அடிப்படை வசதிகள் தேவைகள் இல்லாதது ஒரு புறம்,
மேலும் அதிகமனோர் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து கொண்டு சரக்கு பெட்டகம் (குடோன்) பயன்படுத்துவதால் சந்தைப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.என பல புறங்களும் சேர்ந்து மதுக்கூர் சந்தை நிலை குலைந்து போய்விட்டது.தெற்கு தேய்துவிட்டது !பண்டிகைக்காலங்களில் மட்டும் சந்தைப்பகுதியில் சிறப்பு கடைகள் ஏற்படுத்துவதால் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் உள்ளது.மற்ற காலங்களில் வெறிச்சோடியான நிலைதான் உள்ளது.
பல்வேறு சிறப்புக்களை பெற்ற மதுக்கூர் சந்தை இன்று பொலிவிழந்து உள்ளது.ஆனால் பழைய மதுக்கூர் (வடக்கு) பெரமையா கோவில் பகுதி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாக மாறி வருகின்றது.அங்குள்ள செல்வேந்தர்கள் புதிய வணிக வளாகங்களை உருவாக்கி வருகின்றார்கள்.மதுக்கூர் பேரூராட்சி எல்லை முடிவுப்பகுதியில் புதிய கடைகளை மதுக்கூர்வடக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு (உழவர் சந்தைப்போன்று செட்) கடைகள் முறைப்படி உள்ளூர் வாசிகளுக்கு ஏலம் விடப்பட்டது.மதுக்கூர் நகரின் சந்தை தேய்ந்து வரும் நிலையில் மதுக்கூர் வடக்கு வளர்ந்து வருகின்றது.
மதுக்கூர் சந்தைப்பகுதி பொழிவுபெற வேண்டுமெனில் ஜமாத்துக்கு சொந்தமான கடைகள் உள்வாடகைக்கு விடுவது தவீர்க்கப்பட வேண்டும்.வியாபாரிகளுக்கும்,வாடிக்கையாளர்களுக்கும் தேவையான அத்தியவாசிய தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
(ஜமாத்துக்கு சொந்தமான கடைகளை உள் வாடகைக்கு கொடுப்பவர்களின் விபரம் விரைவில்...இன்ஷா அல்லாஹ்.

No comments:
Post a Comment