Wednesday, March 21, 2012
பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் பயணிகளுக்காக மார்ச் 24-ல் சிறப்பு முகாம்
தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்தில் (பி.எஸ்.கே.) ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெறும் வகையிலான ஹஜ் மேளா என்ற சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே. பாலமுருகன் தெரிவித்திருப்பது: ஹஜ் யாத்திரை செல்லும் பாஸ்போர்ட் இல்லாத யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் பெற வசதி ஏற்படுத்தி தரும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் மேளா மார்ச் 24-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த மேளா அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த மேளாவில் பங்கேற்கவுள்ள யாத்ரீகர்கள் இணையவழி மூலம் விண்ணப்பம் செய்து, விண்ணப்பப் பதிவு எண் நகலுடன் வர வேண்டும். மேலும், பாஸ்போர்ட்டுக்குத் தேவையான நகல், அசல் ஆவணங்களுடனும் வர வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. முன்பதிவு தேவையில்லை என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment