இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, February 25, 2010

சென்னையில் மாணவர்களின் உணர்ச்சிமிகு பேரணி! தமுமுக மாணவரணி பங்கேற்ப்பு !

மத்திய மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் கபில்சிபல் கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியாவில் உள்ள அனைத்து பிற்-படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளதை எதிர்த்து, திக,தமுமுக மாணவரணி,விடுதலை சிறுத்தைகள் உட்பட மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்.அனைத்து மாணவர் கூட்டமைப்பின் சார்-பில் மாபெரும் பேரணி சென்னையில் 23.2.2010 மாலை எழுச்சி-யுடன் நடைபெற்றது.


இந்தியாவில் மீண்டும் மனுதர்ம கல்வித் திட்டத்தை புகுத்தும் மத்திய அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும், உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை எதிர்த்தும் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அனைத்து மாணவர் பேரவை சார்-பில் மாணவர்கள் மன்றோ சிலை அருகில் கூடினர்.




ஒடுக்கப்பட்ட, கிராமப்-புற மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை-யும், மத்திய மனுதர்ம அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும் அரை மணி நேரம் ஒலி முழக்கமிட்டனர்.


பின்னர் அனைத்து மாணவர் கூட்டமைப்பினரான திராவிட மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் மாணவர் பிரிவு, தமுமுக மாணவரணி, முஸ்லிம் லீக், சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்-கள், நந்தனம் கல்லூரி மாணவர்கள், பச்சையப்-பன் கல்லூரி மாணவர்-கள் என மாணவர்கள் பேரணி-யாகப் புறப்படத் தயாராக இருந்தனர்.


திராவிடர் கழக பொதுச்-செயலாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் மாணவர்களின் பேரணி தொடங்கி வைக்கும் முகமாக மாண-வர்களை வாழ்த்தியும், அனைத்து மாணவர் கூட்டமைப்பின் நோக்கத்தை விளக்கியும் பேசினார்.



அவரது உரையில் கூறியதாவது:இன்றைக்குத் தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்தும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்ச-ரைக் கண்டித்தும் மாண-வர்கள் பேரணியாகப் புறப்பட்டு அவர்களு-டைய கோரிக்கைகளை வலி-யுறுத்த உள்ளனர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள் ஒரு புதிய கல்விக் கொள்கைத் திட்-டத்தை அறிவித்திருக்கிறார்.தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறவிடாமல் தடுக்க ஒரு புதிய சட்டத்தை, திட்டமிட்டு ஒரு சதிச் செயலை கபில்சிபல் உருவாக்கியிருக்கிறார்.நீண்ட காலமாக நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, சமூகநீதி தத்-துவத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய திட்டம்-தான் இந்த கல்வித் திட்டமாகும்.தமிழ்நாட்டில் இருபத்-திரண்டு ஆண்டுகளாக நாம் போராடி, விரட்டப்-பட்ட நுழைவுத் தேர்வு முறையை இந்தக் கல்வித் திட்டத்தின்மூலம் கொண்டு-வந்து ஒடுக்கப்-பட்ட மாணவர்களை கல்வியில் முன்னேற விடா-மல் தடுக்க ஒரு புதிய யுக்-தியைக் கையாண்டிருக்-கின்-றார். அனைத்து மாண-வர்களும் ஒன்று சேர்ந்து இந்தத் திட்-டத்தை இந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டும்.அன்று பெரியார் போராடினார்.மாணவர் சமுதாயம் இந்த பேரபாயத்தை உணர்ந்து இதை முறி-யடித்தாகவேண்டும். அப்பொழுதுதான் தாழ்த்-தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகள் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும்.எனவே, அனைத்து மாணவர் அமைப்பின் சார்பில் இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கின்ற போராட்டம் இது ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும்வரை இந்த மாபெரும் போராட்டம் தொடரும். இவ்வாறு கலி.-பூங்குன்றன் பேசினார்.



மமக பொதுசெயலாளர் அப்துல் சமத் மற்றும் மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்




மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, பேசும்போது பெரியார் உருவாக்கிய சமூக நீதி போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.மத்திய அரசின் இந்த கயமைத்தனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த பேரணி போராட்டம் வெறும் தொடக்கம்தான் இன்னும் முழு வீச்சில் இப்போராட்டம் எழுச்சி பெரும் என்றார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து, திராவிடர் கழக மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் பேசினர். புரட்சிகர இளை-ஞர் முன்னணி அமைப்பைச் சார்ந்த வீராளன் தலைமையிலும் மாணவர்-கள் பங்கேற்றனர். மாணவர்கள் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஆவேசத்துடன் ஒலி முழக்கங்களுடன் சென்று பின்னர் மாலை 5.00 மணி அளவில் புதிய தலைமை செயலகத்தை அடைந்தது.உடனே கபில் சிபலின் கொடும்பாவியாக அட்டைகளை மாணவர்கள் கொளுத்த காவல துறை உடனடியாக மாணவர்களை கலைந்து செல்ல கோரியது.எனினும் மாணவர்கள் அங்கேயே ஆர்பாட்டத்தில் இறங்கினர்.மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினர்.தமுமுக மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்,விடுதலை சிறுத்தைகள் மாணவர் பொறுப்பாளர் இளங்கோ,புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சிவா ஆகியோர் எழுச்சியோடு பேரணியின் நோக்கத்தை எடுத்துரைத்து தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அறைகூவல் விடுத்தனர்.இறுதியாக மாணவர் கூட்டமைப்-பின் ஒருங்கிணைப்பாளர் ச. பிரின்ஸ் இறுதியாக நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...