
இதை எதிர்த்து செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கற்களால் தாக்கினார்கள். இந்த தகவல் தமுமுகவினருக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகிகளும், சகோதர அமைப்பினரும் சம்பவ இடத்தில் கூடினர். இதற்கிடையில் பள்ளிவாசலை சுற்றி 100லிக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு போட்டப்பட்ட னர். இந்த சம்பவம் இரு சமுதாயத்திற்கும் இடையை மதக்கலவரம் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின் அனைத்து முஸ்லிம் அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15.2.2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அடக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் கபரஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த உறுதி மீறல் செயல் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களிடம் மிகுந்த அதிருப்தியும், வேதனையையும் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைப்புகளிடம் இருந்து தொடர் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment