பட்டுக்கோட்டை தஞ்சாவூர் புதிய ரயில்பாதை திட்டம்.மனிதநேய மக்கள் கட்சி நன்றி.
ரயில்வே நிலைக்குழுத்தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் தொடர் முயற்சி காரணமாக மன்னார்குடி,பட்டுக்கோட்டை மதுக்கூர் வழி ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ரயில்வே திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதி வாழ் அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாக பட்டுக்கோட்டை தஞ்சாவூர் (ஒரத்தநாடு வழி) இரயில்பாதை திட்டத்திற்க்கு மத்திய ரயில்வே அமைச்சர் திரு பவன்குமார் அவர்கள் ரூ 300 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவின்றது.
இத்திட்டத்தின் மூலமாக இப்பகுதியின் விவாசாயிகள்,மாணவர்கள்,அலுவலகம் செல்பவர்கள்,பொதுமக்கள்,என பலரும் பயன் பெறுவார்கள்.
இதன்படி பட்டுக்கோட்டை தஞ்சாவூருக்கு 47 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் கொண்டுவர தொடர் முயற்சி எடுத்த இரயில்வே நிலைக்குழுத்தலைவர் திரு டி.ஆர்.பாலு அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி,மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு)சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியின தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment