இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, January 26, 2013


மதுக்கூரில் இந்திய தேசத்தின் 64 வது குடியரசு தின விழா

இந்திய தேசத்தின் 64 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர அலுவலகத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நகர நிர்வாகிகள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான்,ராசிக்,நிசார் அகமது மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும்  கலந்து கொண்டார்கள்.

சகோதரர் பவாஸ் அவர்கள் விடுதலை போரில் முஸ்லிம்களின் பங்கினைப்பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்.

மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திரு சிவராமன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித்தலைவர் சகோதரர் பஷீர் அகமது,பேரூராட்சி உறுப்பினர்கள் சகோதரர்கள் பெரமையன்,சுரேஷ்,முருகையன்,கபார்,சுரேஷ்,மணிவேல் மற்றும் ஒப்பந்தகாரர் சகோதரர் ராஜகோபால்,தொழிலதிபர் சந்திரசேகரன்,எழுத்தர் ஷரீப்,புலவர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (சந்தைப்பள்ளி) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் தேசியகொடியினை ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க தலைவர் சகோதரர் அஜீஸ் ரஹ்மான்,முகம்மது அலி ஜின்னா,கல்விக்குழுத்தலைவர் சகோதரர் கபார்,ராசிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மதுக்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ஹேமலதா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து பள்ளிக்குழுந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் சகோதரர் முகம்மது யாக்கூப்,செயலாளர் சகோதரர் சாகுல்ஹமீது,முன்னாள் தாளாளர் உட்பட பள்ளியின் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.







No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...