மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி (29/11/2017)
மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி பல்வேறு சிறப்புகளை பெற்றது.ஆரம்ப காலத்தில் ஆரம்ப பள்ளிகூடமாக நிகழ்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தப்பட்டு இன்று சிறப்புடன் செயல்படுகின்றது.இப்பள்ளியின் கட்டிடங்கள் பழமையானதால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கிராம கல்விக்குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆட்சியாளர்களை அனுகினார்கள்.இவர்களின் முயற்சியால் நபார்டு வங்கியின் உதவியுடன் சுமார் 2 கோடி 27 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்,இரண்டு தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்இரண்டு பள்ளிக்கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பள்ளிக்கட்டிடங்கள் வருகின்ற 29/11/2017 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைக்கின்றார்கள்.இப்புதிய கட்டிடம் வர காரணமாக இருந்த அனைவருக்கும் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment