மதுக்கூரில் ஸ்டேட் பாங்க் SBI
மதுக்கூர் மாநகரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்று இதுவரை இந்தியன் வங்கி மட்டுமே செயல்பட்டுவந்தது.மதுக்கூர் வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதை உணர்ந்த தனியார் வங்கிகள் தங்களின் கிளைகளை போட்டிப்போட்டு மதுக்கூரில் திறக்கின்றார்கள்,மேலும் விசாலமான இடத்திற்க்கு இடமாற்றங்களும் செய்கின்றார்கள்.இந்நிலையில் மதுக்கூருக்கு அரசுடமையாக்கப்பட்ட மேலும் ஒரு வங்கி வேண்டும் என பலரும் பல வகைகளில் முயற்சி மேற்கொண்டார்கள்.குறிப்பாக மதுக்கூர் .காம் வாசகர்கள் சார்பாகவும் அதன் நிறுவனரான சகோதரர் எம்.முகம்மது இஷாக் அவர்களும் அவரின் பங்குக்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அனைவரின் முயற்சிகளின் அடிப்படையில் பாரத் ஸ்டேட் பாங்கு தனது கிளையினை மதுக்கூர் மெயின்ரோட்டில் அறிவழகன் மருத்துவமனை எதிரில் நாளை29/07/2013 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு அதன் பொதுமேலாளர் திருச்சிராப்பள்ளி திரு அருண் அகர்வால் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.