இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, May 11, 2013

மதுக்கூரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

மதுக்கூரில் பரபரப்பு

பாரதீய ஜனதா கட்சியின் கண்டனப்பொதுக்கூட்டம் (மத்திய அரசை கண்டித்து) இன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெறுகின்றது.இப்பொதுக்கூட்டத்தின் காரணமாக முக்கூட்டுச்சாலைவழியாக பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் காலை முதலே ஒருவழிப்பாதைவழியாக திருப்பிவிடப்பட்டது.மதுக்கூரில் அரசியல்,சமுதாய அமைப்புகள் பொதுகூட்டங்கள் நடத்தினால் பேரூந்து நிலையத்தில் தான் நடைபெறுவது வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக இப்பொதுக்கூட்டத்திற்கு முக்கூட்டுச்சாலையில் (பட்டுக்கோட்டை ரோட்டில்) இடம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த மதுக்கூர் நகர தமுமுகவினர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாரை தொடர்பு கொண்டு வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களுக்கு மிகவும் இடையூறான பகுதியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்த போது.இனிமேல் பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை.வரும் காலங்களில் முக்கூட்டுச்சாலையில் மட்டுமே பொதுகூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்ற மழுப்பல் பதில் ஒன்றை அளித்தார்.

இப்பொதுக்கூட்டத்தில் BJP மாநில தலைவர் பொன்.இராதகிருஷ்ணன் பேசுகின்றார்.இன்று மதுக்கூரில் உள்ள தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுவதல் கூடுதல் பதற்றம் நிகழ்கின்றது.இதன்காரணமாக மதுக்கூரில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்க்கு குவிக்கப்படுவது போன்று போலீஸார் மதுக்கூரில் குவிக்கப்பட்டுள்ளார்கள். மெயின்ரோடு,சூரியத்தோட்டம் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.ஒருவிதமான பதற்றம் மதுக்கூரில் நிலவி வருகின்றது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...