மதுக்கூர் தமுமுக நகர மாணவரணி பொறுப்பாளருக்கு அரிமா சங்கம் சார்பாக பாராட்டு. (அல்ஹம்துலில்லாஹ்)
மதுக்கூர் அருகில் உள்ள படப்பைக்காடு கிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி குளத்தில் குளிக்க சென்ற 5 குழந்தைகள் தண்ணீரில் முழ்கியது.அதே கரையில் குளித்த சகோதரர் ஜபருல்லா துணிச்சலாக போராடி மூன்று குழந்தைகளை காப்பாற்றினார்.(இச்செய்தியினை கடந்த 06/05/2012 அன்று இமெயில் மூலமாக நமது வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம்)
சகோதரர் ஜபருல்லா அவர்களின் இந்த துணிச்சலான செயலைப்பாராட்டி பல்வேறு சமுதாய.சமூக.சேவை அமைப்புகள் பாராட்டி வருகின்றார்கள்.கடந்த 02/03/2013 அன்று அரிமா சங்கம் சார்பாக சகோதரர் ஜபருல்லா அவர்களை பாராட்டி பரிசும் வழங்கினார்கள்.(எல்லா புகழும் இறைவனுக்கே !)
சகோதரர் ஜபருல்லா அவர்கள் மதுக்கூர் நகர தமுமுக மாணவரணி பொறுப்பாளராக இருந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் நகர துணைச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய செய்தி
(3 குழந்தைகளை காப்பாற்றிய தமுமுக மாணவரணி பொறுப்பாளர்.)
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பேருராட்சி துணைத்தலைவராக இருப்பவர் ஜீவானந்தம் என்கின்ற ஆனந்த்.இவரின் சகோதரியின் பிள்ளைகள் கோடை விடுமுறைக்காக மதுக்கூரில் உள்ள தாய்மாமா (ஆனந்த்) வீட்டிற்க்கு வந்துள்ளார்கள்.
04/05/2012 காலை சுமார் 11:30 மணியளவில் ஆனந்த சகோதரிகளின் பிள்ளைகள்,ஆனந்தின் மகள் என 5 குழந்தைகள் மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் (படப்பைக்காடு கிராம)எல்லைக்கு உட்பட்ட குளத்தில் நேற்று குளித்து உள்ளார்கள்.குழந்தைகள் குளித்த அதே கரையில் சகோதரர் ஜபருல்லாவும் (மதுக்கூர் தமுமுக மாணவரணி பொறுப்பாளர்)குளித்துள்ளார்.
முதன்முதலாக அந்த குளத்தில் குளித்த குழந்தைகள் குளத்தின் ஆழத்தை அறியாமல் சற்று தொலைவில் சென்றுவிட்டனார்.நீச்சல் தெரியாத குழந்தைகள் 5 பேரும் சகதி நிறைந்த பகுதிக்கு சென்றுவிட்டனர் அவர்களின் ரஞ்சித்(12) என்ற மாணவன் தன் கண் எதிரே ராஜேஸ் (14),நந்தகுமார் (6)இருவரும் தண்ணீரில் மூழ்குவதைஅறிந்து கரையில் தனது துணிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்த சகோதரர் ஜபருல்லாவை நோக்கி அண்ணே எங்களை காப்பாற்றுங்கள் என சப்தம் போட்டுஇருக்கின்றார்.குழந்தைகள் தண்ணீரில் மூழ்குவதை அறிந்த சகோதரர் ஜபருல்லா துரிதமாக செய்ல்பட்டு குழந்தைகள் கபில் (5),ரஞ்சித் (15) காவியா (12) மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி கரையில் சேர்த்துவிட்டு மீண்டும் குளத்துக்குள் சென்று மற்ற இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் செய்து உள்ளார்.அவரால் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை.
துரிதமாக செயல்பட்டு 3 குழந்தைகளை காப்பாற்றிய சகோதரர் ஜபருல்லா அவர்களின் செயல் அனைவராலும் பாரட்டப்படக்கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment