பேரன்பு தம்பி கீழை ஜமீல் நம்மை விட்டுப் பிரிந்தார் ( இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் )
கீழக்கரை ஜமீல் முஹம்மது. 1980 களின் தொடக்கத்தில் சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள எங்கள் மாணவர் இயக்க தலைமையகத்தில் ரமலான் இரவுகளில் தொடர்ந்து நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின் விளைவாக தங்களை இணைத்துக் கொண்ட கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். எஸ்எம் பாக்கர், எஸஎம் புகாரி, முஸம்மில் முதலியோர்களும் அதில் அடங்கும்.
துணிச்சலாகக் கருத்து சொல்வதில் அவர் தனி ரகம். இடைவிடாத சமூகப் பணி. தமுமுகவின் தொடக்கம் முதல் சிறப்பான பணியாற்றியவர் பின்னர் அவர் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்கொண்டாலும் அதிலிருந்து விலகி மீண்டும் நம்முடன் இணக்கமாக பணியாற்றியவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் போதெல்லாம் பாச மழை பொழிந்தவர்.
இன்று அதிகாலை நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற அதிர்ச்சி செய்தியைச் சகோதரர் ஜீல்பிகார் தெரிவித்த போது மனம் பொறுக்கவில்லை.
ஜமீலுடன் பழகிய நினைவுகள் எண்ண அலைகளில் என்றும் மறையாது.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனம் வழங்கவும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழகிய பொறுமை அளிக்கவும் வல்லவன் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
தலைவர் தமுமுக
தலைவர் தமுமுக
