Saturday, August 16, 2014
Friday, August 15, 2014
மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இந்தியாவின் 68 வது சுகந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று சிறப்புடன் நடைபெற்றது.
இன்று காலை சுமார் 9:00 மணியளவில் மதுக்கூர் நகர தமுமுக அலுவலகத்தில் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் அமீரக முன்னாள் பொறுப்பாளர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காலை 10:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் நகர தமுமுக சார்பாக இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இம்முகாமினை சமூக ஆர்வலர் சகோதரர் KNM நத்தர்ஷா அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் NR ரெங்கராஜன் அவர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் M.தண்டாயுதபாணி,முன்னாள் அரிமா தலைவர் சகோதரர் A.ஜாகீர் உசேன்,வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கத்துரை,முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜான் தனசேகரன்,வாட்டாகுடி பாலசுப்ரமணியன்,டாக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியின் மூலமாக 10 சகோதரர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த வகையினை அறிந்து கொண்டார்கள்
மாலை 7:30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சுகந்திர தின தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது."சுகந்திரப்போரில் முஸ்லிம்களின் பங்கு " என்ற தலைப்பில் தமுமுக தலைமைக்கழகப்பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்தினர்கள்.முன்னதாக மாவட்ட கழக பேச்சாளர் பவாஸ் மற்றும் கவுன்சிலர் கபார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
Wednesday, August 13, 2014
எல்லா புகழும் அல்லாஹ்கே
மதுக்கூர் கீற்று சந்தைப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்துவந்தது.இப்பகுதியில் வேகத்தடை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தது.இதுகுறித்து தமுமுகவும் சம்மந்தப்பட்ட துறையில் கோரிக்கை மனுகொடுத்திருந்தது.கடந்த வாரம் மதுக்கூர் தமுமுக அலுவலகம் வந்த நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.நேற்று 12/08/2014 கீற்று சந்தை பகுதியில் புதிய வேகத்தடை அமைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.(மதுக்கூர் மெயின்ரோடு MSM motor அருகில் மார்க்கெட் செல்லும் வழியிலும் வேகத்தடை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது)

Subscribe to:
Posts (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...